வாஸ்துப்படி ஹீரோ வீட்டை இடித்தால் தயாரிப்பாளருக்கு போன காசு திரும்பி வருமா..?
என்னை அறிந்தால் படத்திற்குப்பின் அஜித் தற்போது தனது வீட்டை வாஸ்துப்படி இடித்து சில மாற்றங்கள் செய்வதாக தகவல்கள் வெளியாகின அல்லாவா..? அதற்கு காரணம் என்னை அறிந்தால் படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராததுதான் என்கிறார்கள் விஷயம் தெரிந்த சிலர்..
இன்றுகூட படம் 5௦வது நாள் வெற்றி என போஸ்டர்கள் எல்ல்லாம் தூள் பறக்கின்றன. ஆனால் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமோ மோட்டுவளையை பார்த்தபடி உட்கார்ந்திருக்கும் நிலையில் தான் இருக்கிறாராம். காரணம் என்னை அறிந்தால் அவருக்கு பரிசாக கொடுத்த ‘நட்டம் தானாம்.
ஏ.எம்.ரத்னத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே கௌதம் மேனனை வைத்து படம் தயாரிக்கும் ஐடியா கொஞ்சமும் இல்லையாம். ஆனால் அஜித் சொன்னார் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் அந்த விஷப்பரீட்சையில் இறங்கினாராம். அஜீத்துக்கே கூட பத்து நிமிடத்துக்கு மேல் கதையை சொல்லாத கௌதம் மேனன் ரத்னத்திற்கு மட்டும் சொல்லிவிடுவாரா என்ன?
அதனால் கதை என்னவென்று முழுதாக தெரியாத ஏ.எம்.ரத்னம், கேட்க கேட்க, படப்பிடிப்புக்காக பணத்தை அள்ளி அள்ளி கொடுத்தாராம். படத்தை எடுத்து எடிட் செய்துவிட்டு போட்டுப்பார்த்தால் மொத்தம் நான்கரை மணி நேரத்திற்கு இருந்ததாம் படத்தின் நீளம்.. அதில் இரண்டு மணி நேரத்தை வெட்டி தூக்கிவிட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த இரண்டு மணி நேர காட்சிகள் எத்தனை கோடிகளை விழுங்கியிருக்கின்றன என ரத்னம் ஒருத்தருக்குத்தான் தெரியும்..
சரி படம் கலக்சனை அள்ளும், அதில் சமாளித்துக்கொள்ளலாம் என எதிர்பார்த்தவருக்கு, கிடைத்தது ஆவரேஜ் வசூல் தானே தவிர வழக்கமான அஜீத் பட கலெக்சன் கிடைக்கவே இல்லை. இப்போது தனது படம் சரியாக போகவில்லை என்று அஜித் வாஸ்துப்படி வீட்டின் சில பகுதிகளை இடித்து கட்டி பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார்.. சரி.. இதனால் அவருக்கு எல்லாம் சரியாகிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.. ஏ.எம் ரத்னம் என்ன பரிகாரம் செய்தால் அவர் இழந்த 2௦ கோடி அவருக்கு திரும்ப கிடைக்கும் என தெரிந்தால் யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்..?