வடிவேலுவுக்கு ஜோடியா? சதா கேள்வியும்.. யுவராஜின் விளக்கமும்..!

தெனாலிராமன் படத்தை தொடர்ந்து அந்தப்படத்தின் இயக்குனர், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் ‘எலி’ படத்தில் நடித்து வருகிறார் இல்லையா..? வடிவேலுவுக்கு ஜோடியா நடிக்கணுமா என்றெல்லாம் யோசிக்காமல் இந்தப்படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சம்மதித்துள்ளார் நடிகை சதா.

சதா ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்லைங்கன்னு சொல்ற உங்க மைன்ட் வாய்ஸ் இங்க கேக்குது.. இருந்தாலும் ஷங்கர் பட ஹீரோயின் இல்லையா..? சரி.. வடிவேலுவுடன் நடிக்க சதா எப்படி ஒப்புக்கொண்டார் என்று கேட்டால் பல கோக்குமாக்கு வேலைகளை செய்துதான் அதை சாதித்திருக்கிறார் யுவராஜ்..

ஆனானப்பட்ட அசினே வடிவேலு கூடடூயட் பாடிருக்காங்க, தமன்னா ரொமான்ஸ் பண்ணி பைக்ல சுத்திருக்காங்க, என வடிவேலு நடித்த போக்கிரி, தில்லாலங்கடி கிளிப்பிங்சை எல்லாம் போட்டுக்காட்டி இருக்கிறார் படத்தின் இயக்குனரான யுவராஜ். கூடவே ஸ்ரேயா ஒரு பாட்டுக்கு வடிவேலு கூட ஆடிய வரலாறையும் ஞாபகப்படுத்தியிருக்கிறார் (அந்தப்படத்துடன் தானே ஸ்ரேயாவின் மார்க்கெட் பணால் ஆனது)

ஆமா.. சதா இந்த காமெடி எல்லாம் டிவில பாத்துருக்க மாட்டாராக்கும் என பட்டென்று பதில் கேள்வி கேட்க வேண்டாம். இப்போதைக்கு அவரோட தேவை திரும்பவும் எப்படியாவது பீல்டுல நுழையணும்.. அதுக்கு வடிவேலுங்கிற ஏணி கிடைச்சிருச்சு.. அவ்வளவுதான்..