அனிருத்தை கழட்டிவிடும் முயற்சியில் தனுஷ் இறங்கிவிட்டார் என ஏற்கனவே சொல்லியிருந்தோம் அல்லவா..? ஆனால் அதற்கு முன்னரே அந்த வேலையில் அவரது மனைவி ஐஸ்வர்யா இறங்கிவிட்டார்.. அதுதான் வை ராஜா வை படத்திற்கு அனிருத்தை இசையமைக்க சொல்லாமல், யுவன் சங்கர் ராஜாவிடம் ஒப்படைத்து என்கிறார்கள் விபரம் அறிந்த ஒருசிலர்.
ஆனால் ஐஸ்வர்யாவோ, “முதலில் நான் இசைக்கு ரொம்ப நாள் எடுத்துக்கொள்வேன். அத்தனை நாள் ஒதுக்கி தர முடியாத அளவிற்கு அனிருத் பிசியாக இருக்கிறான். நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்றினால் மக்களிடம் கொலவெறி பாடலை தாண்டிய எதிர்பார்ப்பு ஏற்படும். அதை தராவிட்டால் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக போய்விடும்” என்று கூறியுள்ளார்.
சரி யுவன்சங்கர் ராஜாவை இசையமைக்க தேர்ந்தெடுத்தது ஏன் என்று கேட்டால், “யுவன் எங்கள் குடும்ப நண்பர். நாங்கள் சின்ன வயதிலிருந்தே பிரண்ட்ஸ். என்னோட சிந்தனையும், அவரோட சிந்தனையும் ஒரே மாதிரி இருக்கும். அதனால் அவரை இசை அமைக்கச் சொன்னேன். சூப்பராக இசை அமைத்து கொடுத்திருக்கிறார்” என்கிறார்.
ஐஸ்வர்யா சொன்னதில் இருந்து அவர் அனிருத் படு பிசியாக இருக்கிறார் என்பது க்ளியராகிறதோ இல்லையோ, ஐஸ்வர்யா சொல்லுவதுபோல பொறுமையாக இசையமைக்கும் அளவுக்கு யுவன்சங்கர் ராஜா வேலையில்லாமல் சும்மா இருக்கிறார் என்பது தான் பளிச்சென தெரிகிறது. விக்கிபீடியாவை ஓபன் பண்ணி பார்த்தால் கூட, மாஸ் படம் ஒன்றுதான் யுவன் கைவசம் உள்ளதாக காட்டுகிறது. என்ன ஆச்சு யுவனுக்கு..?