கிஷோர் – ஹார்த்திகா நடிக்கும் “காதலி காணவில்லை”!

மனுநீதி, காசு இருக்கனும், எங்க ராசி நல்லராசி, போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் “காதலி காணவில்லை”

கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹார்த்திகா நடிக்கிறார். மற்றும் ஜி.ஆர், சோப்ராஜ், ரேகா, அபூர்வா உட்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – தயாள் ஓஷோ / இசை – தேனிசை தென்றல் தேவா

பாடல்கள் – அண்ணாமலை, இளையகம்பன்.

கலை – கிஷ்ணாச்சாரி / நடனம் – ராஜு

எடிட்டிங் – தேவராஜ் / ஸ்டன்ட் – மாஸ் மாதா

தயாரிப்பு நிர்வாகம் – தாமஸ்

தயாரிப்பு – ஆர்.பி.பூரணி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி ராஜா

படம் பற்றி இயக்குனர்கள் ரவி ராஜாவிடம் கேட்டோம்…

பிஷ்மா என்கிற இளைஞன் ஒரு அனாதை. ராவணன் என்கிற மந்திரி அடைக்கலம் கொடுத்து பெரிய ரவுடியாக வளர்த்து தன் மந்திரி பதவியை காப்பாற்றிக்கொண்டு முதலமைச்சராக துடிக்கிறான். பிஷ்மா தன்னை ஆளாக்கிய மந்திரிக்காக தன் உயிரையே கொடுக்க தயாராகிறான். இவர்களுக்கு இடையில் திவ்யா என்ற பெண் குறிக்கிட்டு பிஷ்மாவை காதலித்து ராவுடியாக இருந்தவனை மனிதனாக மாற்றுகிறாள். பிஷ்மா தன்னை விட்டு விலகி செல்வதை அறிந்த மந்திரி திவ்யாவை கொலை செய்ய தயாராகிறான்.

சந்தர்ப்ப சூழ்நிலையில் திவ்யா விஷ்மாவை விட்டு வேறு ஒருவரை மணக்க பிஷ்மா மறுபடியும் ரவுடியாக மாறுகிறான்.

ரவுடியாக மாறிய பிஷ்மா மந்திரியுடன் சேர்ந்து CBI ஆபிசரை கொலை செய்ய செல்லும்போது தன காதலியின் கணவன்தான் CBI ஆபீசர் என தெரிந்த பின் தன் காதலியின் கணவனை, கொலை செய்தானா என்பது தான் திரைக்கதை என்றார்கள் இயக்குனர்கள்.