ரெபில் ஸ்டுடியோஸ் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஷாம் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஆக்கோ’. படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய ‘எனக்கென யாரும் இல்லையே” என்ற ஒற்றை பாடல் வெளிவந்து ரசிகர்கள் அனைவரையும் முணுமுணுக்கும் ஒரு பாட்டாய் அமைந்தது.
“அனிருத் பாடிய ‘எனக்கென யாரும் இல்லையே” பாடல் ரசிகர்களிடையே ‘ஆக்கோ’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திகொடுத்துள்ளது. காதலியின் அன்புக்காக ஏங்கும் ஒரு இளைஞனின் ஏக்கத்தை பற்றிய பாடல் இது. இப்பாடலில் நடிக்க இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாய் இருக்கும் அனிருத் மற்றும் அனைவரையும் காதல் கொள்ள தூண்டும் எமி ஜாக்சன் இருவரையும் நடிக்க வைக்கிறோம். பட்டிதொட்டி எங்கும் ஒலித்த இப்பாடலில் இவர்கள் இருவரும் நடிப்பதால் பெரிதும் இளைஞர்களை கவரும்” எனக் கூறினார் இளம் இயக்குனர் ஷாம்.