தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் பெரும் நிறுவனமான Tag Entertainment [P] ltd. சார்பில் தயாரிப்பாளர் திரு. வெண் கோவிந்தா தயாரிக்கும் திரைப்படம் ‘அம்மணி’. பிரபல நடிகை / இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். பெண்களின் சுயமுன்னேற்றத்தை வலியுறுத்திவரும் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்கி, நடித்தும் இருக்கிறார்.
82 வயதான சுப்புலட்சுமி பாட்டியைக் கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது ‘அம்மணி’ படத்தின் படப்பிடிப்புகள் முழுதும் நிறைவடைந்துள்ளது.
‘அம்மணி’ படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் இறுதி ஊர்வலம் காட்சியாக்கப்பட்டது. இக்காட்சியில் இறந்தவராக அவரே நடித்து இயக்கவும் செய்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். “இக்காட்சியில் நடிக்கும்பொழுது என் மனம் மிகவும் கனத்திருந்தது. இது ஒரு இறுதி அஞ்சலி காட்சி என்பது மட்டுமல்லாமல் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பது ஒரு பெரும் காரணமாய் இருந்தது.
“கடைசி நாள் படப்பிடிப்பிக்கு என்னோடு வந்த எனது இளைய மகள் இந்தக் காட்சியை பார்த்து முதலில் சற்று வருந்தினாலும்,இது வெறும் நடிப்புதான் எனப் புரிந்து கொண்டார்.”
“முதல் நாள் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் இறுதிநாள் படப்பிடிப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது. எங்கள் படக் குழுவினரின் இந்த அயராத உழைப்பு கண்டிப்பாக பாராட்டுகளும் விருதுகளும் பெறும் என நம்புகிறோம்”. என மிளிரும் புன்னகையுடன் கூறினார் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
Ammani Wrapped up
Tag entertainment [P] ltd the emerging giant in the Tamil film industry owned by Mr Ven Govinda is producing the film ‘Ammani’, directed by actress turned Director Lakshmy Ramakrishnan. The ‘Yuththam Sei’ Actress well known for her war fare in social empowerment is also acting apart from directing “Ammini”. in her directorial venture.
The first look of the film featuring a 82 year young women Subbulakshmi Patti got raving comments. The shooting process of the movie ‘Ammani’ was completed recently.
The last day of the film’s shoot was a funeral sequence, unusual for a last day shoot. Lakshmy Ramakrishnan played herself as the deceased and directed the funeral scene too.”It was emotive, not just because it was the scene of a funeral but also because it happened to be the last day of the film’s shoot. My younger daughter who accompanied me to the shoot on the last day though initially upset on finding me as the dead person, realized the professional need of the hour and took pains to keep us happy.”
“we shot the last scene of the film co-incidentally on the same place where we had shot the first shoot months ago. This film had witnessed many moments like this and I sure we will be rewarded as well as awarded for this effort” summed up Lakshmy Ramakrishnan with a lively smile.
“ The film’s post production is on full speed. Music Director K has composed all the three songs. The songs have came out really well. Each is of a unique and different colour. I am excited to present this film.” says the Director Lakshmy Ramakrishnan.