கடந்த பத்து வருட சினிமா ஹிஸ்டரியை கவனமாக புரட்டி பாருங்கள். மிக மிக ஆச்சர்யமான உண்மை வெளிப்படும். சீயான்’ விக்ரமுடன் உலகி அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துவிட்டார். லண்டன் அழகி எமி ஜாக்சன் இரண்டு படத்தில் நடித்துவிட்டார். இன்னும் பல முன்னணி நாயகிகள் அனைவரும் நடித்துவிட்டனர். அதேபோல நயன்தாராவும் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா வரைக்கும், அவ்வளவு ஏன் அறிமுக நடிகராக களம் இறங்கிய உதயநிதியுடன் கூட இரண்டு படங்களில் நடித்து விட்டார்.
ஆனால் பத்து வருடங்கள் தாண்டியும் கூட விக்ரமுடன் நயன்தரா ஜோடிசேர்வதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவே இல்லை. இப்போது இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக வரும் செய்திகள் கூட யூகத்தின் அடிப்படையில் பரபரப்புக்காக வெளியாகும் செய்திதான். ஆனால் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இனி இல்லையென்றே விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
காரணம் சில வருடங்களுக்கு முன் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘கள்வனின் காதலி’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானபோது, கந்தசாமி’ படத்திலும் நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு வந்தது. அதற்கும் ஒகே சொன்னாராம நயன்தாரா. ஆனால் சீயானோ எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துக்கொண்டு தன்னுடனும் நயன்தாரா நடித்தால் அவரது இமேஜ் கெடும் என நினைத்தார்.
அதனால் அந்தப்படத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு தனது ‘கந்தசாமி’ படத்தில் நடிக்கவருமாறு அழைப்பு விடுத்தாராம் விக்ரம்.. ஆனால் நயன்தாராவுக்கு சின்ன நடிகர், பெரிய நடிகர் என்கிற பாகுபாடு எப்போதும் பிடிக்காது என்பதால், இப்படிச்சொன்ன விக்ரமுடன் நடிக்கும் ஐடியாவை அப்போதிருந்தே ஒழித்துக்கட்டிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அவரது தற்போதைய மனநிலைக்கு விக்ராந்த்துடன் நடித்தாலும் நடிப்பாரே தவிர விக்ரமுடன் ஒருபோதும் நடிக்கமாட்டார் என்பதுதான் நிஜம் என்கிறார்கள்.