அஞ்சலி தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளார்.. அந்த சூட்டோடு சூட்டாக ரசிகர்களையும் சூடேற்றும் விதமாக கிளாமரிலும் கலக்குகிறார். அப்பாடக்கர் என்கிற சகலகலா வல்லவன் படத்தில் அவரது பெர்பார்மன்சை ட்ரெய்லரிலும் பாடல் காட்சியிலும் பார்க்கும்போதே தெரிகிறது.
இந்தப்படத்தில் சூரி இரண்டாவது ஹீரோ ரேஞ்சில் நடித்துள்ளார். படத்தில் த்ரிஷா, அஞ்சலி இருவரையுமே சூரி காதலிப்பாராம்.. ஒருத்தர் இல்லாட்டி இன்னொருத்தரை கட்டிக்கலாம் என்பதுதான் அவரது பாலிசியாம். ஆனால் அவர்கள் இவரை தர ரேஞ்சுக்கு கலாய்ப்பார்கலாம். அதனால என்ன…? நீங்க லவ் பண்ணுனா பண்ணுங்க.. அது உங்க விருப்பம்.. ஆனா நான் உங்களை லவ் பண்ணுவேன் அது என் உரிமை என. அட்டாகாசம் பண்ணுவாராம் சூரி.
படத்தில் மட்டுமல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயும் கூட அஞ்சலியை சீண்டி விளையாடினாராம் சூரி. தனது காமெடி பிட்டுகளால் கலாய்த்தாராம்.. இதனால் ஒருகட்டத்தில் கடுப்பான அஞ்சலி, சூரியின் விலையுயர்ந்த செல்போனை பிடுங்கி தரையில் போட்டு உடைத்துவிட்டாராம்.. அந்தப்படம் முடியும் வரை அஞ்சலியிடம் இருந்து எப்படியாவது புது செல்போனையோ அல்லது அதற்கான தொகையையோ கறந்துவிடலாம் என சூரி தலையால் தண்ணி குடித்து பார்த்தும் முடியவில்லையாம்.
ஆனால் அஞ்சலியை கேட்டால் நான் என்ன வேண்டுமென்றா உடைத்தேன்.. சூரி தான் இந்த போனை தூக்கிப்போட்டுட்டு இன்னொரு போன் வாங்கவேண்டுமென்று சொல்லிக்கொண்டு இருந்தார். அதற்கு நான் உதவி செய்யும் விதமாகத்தான் அதை வாங்கி கீழே போட்டேன் என்கிறார் கூலாக.. இப்போதும் அஞ்சலியை சூரி வலைவீசி தேடிவருவதாக கேள்வி.