“நான் நடித்த காட்சி சூப்பராக வந்திருந்தது. ஆனால் படம் ரொம்ப நீளமாக இருக்கிறதென்று வெட்டி தூக்கி எறிந்துவிட்டார்கள்” – இது நம்ம ஊரில் பிரபல நடிகர்கள் நடித்த படங்களில் உடன் நடித்த சில சின்னச்சின்ன காமெடி நடிகர்கள் அடிக்கடி குறைபட்டுக்கொள்ளும் விஷயம் தான். அதிலும் ஆரம்ப ஸ்டேஜில் இருக்கும் நடிகர்களுக்குத்தான் இது அடிக்கடி நடக்கும்.
ஆனால் மிகப்பெரிய நடிகரான தனுஷுக்கே இந்த அவலம் நடந்திருப்பது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. விஷயம் இதுதான்.. தனுஷை வைத்து இந்தியில் ‘ராஞ்சனா’ படத்தை இயக்கியவர் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். இவர் மீண்டும் தனுஷை அழைத்து பாலிவுட்டில் நடிக்க வைத்தார். இது எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாதோ நமக்கு தெரியாது.
ஏற்கனவே அவர் இயக்கி ஹிட்டான ‘தனு வெட்ஸ் மனு’ என்ற படத்தின் இரண்டாம் பாகம் தான் அது. அந்த படத்தில் மாதவனும் கங்கனா ரணவத்தும்தான் ஜோடி. ஆக, இதில் தனுஷுக்கு கெளரவ தோற்றம்தான். இருந்தாலும் இந்தியில் தனக்கு ஒரு நல்ல அறிமுகம் கொடுத்தவராயிற்றே என ஆனந்த் எல்.ராய் வேண்டுகோளுக்கு இணங்க அந்த படத்தில் நடித்துக்கொடுத்திருந்தார் தனுஷ்.
அதுமட்டுமல்ல, இந்தப்படம் வெளியாகும்போது இந்தி ரசிகர்கள் தன்னை மீண்டும் நினைவு கூர்வார்கள்.. அதனால் பாலிவுட்டிலும் நாம் கரண்ட்டிலேயே இருக்கலாம் என நினைத்துத்தான் ஒகே சொன்னார் தனுஷ். கெஸ்ட் ரோல் என்பதால் தனுஷிடம் கெஞ்சி கெஞ்சி கால்ஷீட் வாங்கிய இயக்குநர், ஷூட்டிங்கையும் ஒருவழியாக முடித்துவிட்டார்.
ஆனால் படம் ரிலீஸான பின் படத்தை பார்த்த தனுஷுக்கு வேண்டிய சிலர் தனுஷ் நடித்த காட்சிகள் எதுவுமே இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்து விட்டார்கள்… காரணம் படம் நீளம் எனக்கூறி, தனுஷ் நடித்த காட்சிகளை வெட்டிவிட்டாராம் ஆனந்த் எல்.ராய்.. விஷயம் தனுஷுக்கு தெரியவர, உடனே இயக்குனரை போனில் அழைத்த தனுஷ் லெப்ட் அன்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.