ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டு இருந்தான் என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறோம்.. ஆனால் நேற்று முன் தினம் மாமனிதர் அப்துல் கலாம் இறந்த தினத்தன்று இரவு, நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதை பார்க்கும்போது அந்த நிகழ்வு இப்படித்தான் நடந்திருக்குமோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது..
இன்றைய தலைமுறையினராகிய நாம் பெருந்தலைவர் காமராஜரை பார்த்ததில்லை.. ஆனால் இன்றும் வாய் நிறைய பேசுகிறோம்.. ஆனால் காமராஜர் என்பவர் இப்படித்தான் இருந்திருப்பாரோ என எளிமையின் சிகரமாக, நம் கண் முன்னே உதாரண புருஷனாக வாழ்ந்த மாமனிதர் அப்துல் கலாம் இறந்துவிட்டார் என்கிற தகவலை கேட்டதும் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தனுஷ் அப்படியே நிறுத்தியிருக்கவேண்டாமா..?
நிறுத்தினால் என்ன ‘குடி’யா முழுகிப்போய்விடும்..? இந்த வருடம் கொண்டாடாவிட்டால் அடுத்த வருடம் கொண்டாடினால் போச்சு.. பிறந்தநாளை கொண்டாடியது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்களையும் பரப்பிய தனுஷ் கூட்டணியினரின் செயல் ரொம்பவே அருவருக்கத்தக்கது.
இதில் அவரது மனைவி ஐஸ்வர்யா, அண்ணன் செல்வராகவன் இவர்கள் இல்லாமல் நடிகை அமலாபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உற்சாக ஆட்டம் போட்டது அந்த மாமனிதரின் மறைவையே அவர்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ், சமீபத்தில் அவர் நடித்த ‘மாரி’ படத்தில் சிகரெட்டாக ஊதித்தள்ளி பொதுமக்களின் கண்டனங்களுக்கு ஆளானார். அந்த சர்ச்சை ஓயும் முன்னர் அதைவிட மோசமான செயலில் ஈடுபட்டு பலரது வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டார் என்பதே உண்மை..!