கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தால் கூட ஆறு மணிக்கு மேல் ஒரு நிமிஷம் கூட வேலை பார்க்கமாட்டேன் என ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். அதுபோல கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் படப்பிடிப்போடு தன்னுடைய வேலை முடிந்தது என்பதுதான் இத்தனை வருடமாக அஜித் கடைபிடித்து வரும் பாலிசி.
அதேபோல சினிமா சமபந்தப்பட்ட எந்த விழாக்களிலும் கூட கலந்துகொள்ளமாட்டார். திரையுலகம் நடத்தும் போராட்டங்களிலும் கலந்துகொள்ள மாட்டார். அதாவது பரவாயில்லை திரையுலக பிரபலங்கள் யாராவது காலமானால் கூட துக்கம் விசாரிக்க வரமாட்டார். ஆனால் நெருக்கமானவர்களின் வீட்டு விசேஷங்களில் மட்டும் எப்போதாவது கலந்துகொள்வார்.
ஆனால் ஓட்டுப்போடும் நாளில் ஜனங்களோடு ஜனங்களாக வரிசையில் வந்து நின்று பிலிம் காட்டிவிட்டு போவார். எளிமையாக இருக்கிறாராமாம். ஒரு படம் என்பது கிட்டத்தட்ட விளம்பர பொருள் தான். அதிலும் அந்தப்படத்தை பார்க்கவரும் ரசிகன் அந்த நடிகருக்க்காகத்தான் வருகிறான்..
அப்படி இருக்கையில் அந்தப்பொருளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க உதவுவதில் அவருக்கும் பங்கு இருக்கிறது தானே. அந்த தார்மீக கடமையை மறுத்துவிட்டு எளிமை என்கிற பேரில் சீன் போடுவது, அப்புகுட்டியை வைத்து போட்டோஷூட் நடத்துவது இதெல்லாம் திரையுலகில் பலரையும் கொதிக்க வைத்திருப்பது உண்மைதான்.
ஆனால் என்ன செய்வது, அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நிற்பதால் அவரது கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டுதான் படத்தை தயாரிக்கிறார்கள்.. இன்று நடைபெற்ற ‘பாயும்புலி’ பட விழாவில் கூட தயாரிப்பாளரும், தமிழ்சினிமாவின் மிக முக்கிய பைனான்சியருமான அன்பு ‘சில நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.. ஆனால் படத்திற்கு எந்த உதவியும் செய்வதில்லை” என அஜித்தை மறைமுகமாக அட்டாக் பண்ணினார்..