சண்டிவீரன் – விமர்சனம்

அதர்வாவின் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் பல வருடங்களாக குடிநீர் தொடர்பாக பிரச்சனை.. அதர்வாவின் ஊரில் இருக்கும் குளத்து நீர்தான் பக்கத்து ஊருக்கே குடிநீர் ஆதாரம். ஆனால் குளத்தை குத்தகை எடுத்திருக்கும் கிராமத்து மில்லுக்காரர் லால், அதில் மீன் வளர்ப்பதாக சொல்லி நீரை மாசுபடுத்துகிறார். அந்த அசுத்த நீரை குடித்து பக்கத்து ஊரில் பலர் உயிரிழக்கின்றனர்.

இந்தப்பிரச்சனைக்காக பலவருடங்களுக்கு முன் போராடிய அதர்வாவின் தந்தை, அப்போது நடந்த கலவரத்தில் கொல்லப்படுகிறார். பின்னாளில் பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்றுவந்த அதர்வா, மில்லுக்காரர் மகளான காதலி ஆனந்தியுடன் சுற்றுவதில் கவனம் காட்டினாலும் ஒரு கட்டத்தில் இந்த குடிநீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர நினைத்து குளத்தை தானே ஏலத்தில் எடுக்க நினைக்கிறார்.

ஆனால் அது முடியாமல் போகவே, அதர்வாவின் யோசனையை ஏற்று பக்கத்து ஊர்க்காரர்கள் இங்கே வந்து கெஞ்சி, மீண்டும் அவமானப்பட்டு திரும்புகிறார்கள்.. அதற்கு பழிதீர்க்கும் விதமாக இந்த ஊர் பஞ்சாயத்து தலைவரை விபத்தில் சிக்கவைக்கிறார்கள். பிரச்சனையை பக்கத்து ஊர் ஆட்கள் மேல் திசைதிருப்பி, மக்களை தூண்டிவிடும் லால், இந்த களேபரத்தில் தன் மகளை காதலிக்கும் அதர்வாவையும் போட்டுத்தள்ள ஆட்களை ஏவுகிறார்.. சண்டிவீரன் அதர்வா சாதித்தாரா..? அல்லது எதிரியின் சூழ்ச்சியால் சரிந்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

ப்ளஸ்

· ஓரளவு எடுபடும் அதர்வாவின் குறும்புத்தனம்

· ஆனந்தியின் அழகு முகம்

· வில்லன் லாலின் க்ளைமாக்ஸ் நடிப்பு

· அதர்வாவின் நண்பராக வருபவரின் யதார்த்தமான நடிப்பு.

· கிராமத்து நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் ஒளிப்பதிவு

· அருணகிரியின் இசையில் பாடல்களும், சபேஷ்-முரளியின் சபாஷ் போடவைக்கும் பின்னணி இசையும்

மைனஸ்

· இயக்குனரின் முந்தைய படங்களான களவாணியையும் நையாண்டியையும் ஞாபகப்படுத்தும் காதல் மற்றும் திருவிழா காட்சிகள்

· சண்டிவீரன் என்கிற தலைப்புகேற்றபடி அதர்வாவின் கேரக்டர் வலுவில்லாமல் அமைக்கப்பட்டிருப்பது

· குளத்தில் மீன் வளர்ப்பதாக லால் செய்யும் அக்கிரமங்களுக்கு ஊரே துணை நிற்பதாக காட்டியிருப்பது..

. அதர்வா சிங்கப்பூர் ஜெயிலில் அடிவாங்கும் ஒப்பனிங் காட்சியை அவ்வளவு பில்டப்பாக காட்டுவது கதை நகர்வதற்கு எந்தவிதத்திலும் உதவாமல் போவது.

படத்தில் சில குறைகள் இருந்தாலும், “அலுங்குறேன் குலுங்கிறேன்” என்ற பாடலுக்காகவும் தண்ணீர் பிரச்சினையை பற்றி சொன்னதற்காகவும் சற்குணம் அவர்களை பாராட்டலாம்..