எண்ணத்தில் இருப்பதுதான் வார்த்தைகளாக வெளிப்படும் என்பார்கள்.. ஆர்யா மற்றும் விஷால் ஆகியோரின் செயல்களை பார்த்தால் அது உண்மைதானோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. சினிமாவில் பொலி காளைகளாக இன்னும் திருமணமாகமல் சுற்றி வருபவர்கள் தான் இவர்கள் இருவரும்..
விஷாலின் திருமணப்பேச்சு பற்றிய கேள்வி எழும்போதெல்லாம் தான் லவ் பண்ணுகிறேன் என்பதை மட்டும் கோடிட்டு காட்டியிருக்கிறாரே தவிர, அது யார் என்று இன்னும் சொன்னதே இல்லை.. அவ்வப்போது அவருடன் நடித்த நயன்தாரா, த்ரிஷாவில் ஆரம்பித்து லட்சுமி மேனன், வரலட்ச்மி வரை இவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என கிசுகிசுக்கப்பட்டது உண்டு.. இதில் இறுதிப்பட்டியலில் இரண்டு லட்சுமிகள் தான் இன்னும் சந்தேக லிஸ்ட்டில் உள்ளனர்.
பிக்கப் நடிகர் என்கிற பட்டம் வாங்கும் அளவுக்கு அனைத்து நடிகைகளுக்கும் ஆர்யா செல்லப்பிள்ளை தான் என்றாலும், ஆர்யாவின் திருமணம் குறித்த கிசுகிசு எழுவதெல்லாம் நயன்தாராவை முன்னிறுத்தி மட்டும் தான். அத்தனைக்கு அவர்கள் திக் பிரண்ட்ஸ்.. அதைத்தான் அவர்கள் பதிலாகவும் சொல்லி வருகிறார்கள்.
இந்தநிலையில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் ஆர்யாவுக்கு பெண் தேடும் காட்சிகளில் எல்லாம், நயன்தாரா மாதிரி பெண் தான் வேணும் என்பார். க்ளைமாக்ஸில் வரும் விஷாலோ தனது மனைவியிடம் போனில் பேசும்போது லட்சுமிக்குட்டி என கொஞ்சுவார்.. (எந்த லட்சுமி என்பதுதான் டவுட்.. பொன் வாயசை வைத்து பார்க்கும்போது லட்சுமி மேனனாக இருக்கலாம் என்றே தெரிகிறது.)
ஆக மேலே டைட்டிலில் சொன்னபடி அவரவர் இந்த முடிவைத்தான் எடுக்கப்போகிறார்கள் என்பதைத்தான் சூசகமாக உணர்த்துகிறார்களோ என்னவோ..?
பின்குறிப்பு : நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருந்த புகைப்படம் வெளியானதையும் இதையும் முடிச்சுப்போட்டுக்கொள்ள வேண்டாம்.