ஒரு நடிகை எந்த அளவுக்கு ஓவர் பந்தா காட்டவேண்டும் என்பதில் அசினையே மிஞ்சியவர் தான் தெலுங்கு நடிகை இலியானா. தனது வத்தலும் தொத்தலுமான உடல்வாகு தான் தனக்கு பிளஸ் பாய்ண்ட் என நினைத்த இலியானாவுக்கு முன்னணி நடிகர்கள் படங்களாகவே கிடைத்ததால் மிதப்பு ஏறியது.. போதாததற்கு ஷங்கர் டைரக்சனில் விஜய் படத்தில் வேறு நடித்தாரா, ஆட்டம் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆகியது..
ஆனால் ஓவர் சீன் போட்ட, ஆனானப்பட்ட அசினே ஆட்டம் காணவில்லையா..? அசினைப்போலவே இவருக்கும் இந்தியில் சில படங்கள் கிடைக்க, வருமானமும் கூடுதலாக அதற்கேற்றவாறு சலம்பலும் கூடியது. ஆனால் இந்தி எத்தனை நாளைக்கு சோறு போடும்..? கடந்த வருடம் இவர் நடித்த ‘ஹேப்பி எண்டிங்’ படம் பாலிவுட்டில் இவருக்கு சோக எண்டிங்காக மாறிவிட்டது.
அடுத்து 2016ல் வெளியாவதற்காக ஒரே ஒரு இந்திப்படம் தான் கைவசம் இருக்கிறதே தவிர வேறு படங்கள் எதுவும் இல்லை. தன்னுடன் நடித்த தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் மீண்டும் நடிக்க தூதுவிட்டு பார்த்தார்.. ஆனால் இவர் இந்திக்குப்போனவுடன் அவர்களது படங்களில் நடிக்க முடியாமல் இருப்பது போல பந்தா காட்டி சீன் போட்டதால், அவர்களும் இப்போது இலியானா வந்தால் வாசல் கதவை சாத்தச்சொல்லிவிட்டார்களாம்.