நிச்சயமாக அரசியல் மேட்டர் இல்லைங்க.. ஆனா அதுக்கும் மேல.. அடடடா.. நம்ம தமிழ்சினிமாவுல டைட்டில் வைப்பதில் நடக்கும் அட்ராசிட்டி இருக்குதே.. இப்படி வேறெங்கயும் நடக்குமான்னு தெரியலை.. இதில் ஒருபடி மேலாக விஜய், அஜித் போன்ற ஹீரோக்களின் படங்களுக்கு அவர்கள் தற்போது நடித்துவரும் படத்தின் எண்ணிக்கையையே தற்காலிகமான டைட்டிலாக வைத்து மண்டை காய விடுவது கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில் அஜித் தற்போது நடித்துவரும் படத்திற்கு ‘தல-56’, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘விஜய்-59’ என டைட்டில் வைத்து இப்போது வரை ரசிகர்களை சுத்தலில் தான் விட்டுள்ளனர்.. கொஞ்சநாள் முன்புவரை விஜய்யின் 59வது படத்துக்கு ரஜினி நடித்த மூன்றுமுகம் பட டைட்டிலை வைப்பதாகத்தான் செய்திகள் அடிப்பட்டன..
ஆனால் இப்போது புதிய செய்தியாக ரஜினியை விட்டுவிட்டு கேப்டன் விஜயகாந்த் பக்கம் நம்ம இளைய தளபதி தாவியிருக்கிறார்னு செய்தி ஒன்னு கசிஞ்சிருக்கு.. அதாவது ரஜினி பட டைட்டிலை விட்டுட்டு, கேப்டன் பட டைட்டில் பக்கம் பார்வையை திருப்பியிருக்கார் விஜய். 1984ல் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்சன்ல விஜயகாந்த் நடித்த ‘வெற்றி’ பட டைட்டிலை தனது புதிய படத்துக்கு வைக்கப்போவதாக பேச்சு அடிபட்டுள்ளது.
இதில் என்ன ஒரு பியூட்டி என்றால், 32 வருடத்திற்கு முன் வெளியான இந்தப்படத்தில் சிறுவயது கேப்டனாக நடித்து தான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார் விஜய். அந்தவகையில் தான் நடித்த முதல் படத்தின் பெயரையே தற்போது தான் நடிக்கும் படத்திற்கு சூட்டப்போகிறார் என்றுகூட சொல்லலாம்.