நேற்று நடைபெற்ற நடிகர்சங்க கூட்டத்தில் அத்தனை சீனியர் நடிகர்களுடன் சிம்புவும் கலந்துகொண்டதை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டுத்தான் போனார்கள்.. ஆனால் விபரம் அறிந்தவர்களோ, இதிலென்ன ஆச்சர்யம்.. அவர் விஜய், அஜீத்துக்கெல்லாம் சீனியராச்சே என ஆச்சர்யப்படமல் நின்றார்கள். பின்னே.. கிட்டத்தட்ட 27 வருடங்களாக நடித்துக்கொண்டிருந்தால் சீனியர் தானே..
அந்த சீனியாரிட்டி அடிப்படையில் தானோ என்னவோ சரத்குமார்-ராதாரவி டீமுடன் கைகோர்த்திருக்கிறார் சிம்பு. நேற்றைய கூட்டத்தில் சிம்பு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக சரத்குமார் அறிவித்தார்.. சிம்புவும் வழக்கம்போல, நான் பதவிக்காக இங்கே வரவில்ல. பாயசம் சாப்பிட வரவில்லை என தனக்கெனவோ பதவியின் மீது ஆசையில்லாதது போலவே காட்டிக்கொண்டார்..
ஆனால் இப்போதைய சூழலில் அவருக்கு துணைத்தலைவர் என்கிற சக்திவாய்ந்த பதவி அவசியமான ஒன்றுதான். காரணம் ஒருவேளை தேர்தலில் ஜெயித்துவிட்டால் இனிமேல் வரப்போகும் தனது படங்கள் எந்த எதிர்ப்பை சந்தித்தாலும் சங்க துணைத்தலைவர் என்கிற ரீதியில் அத்தனையையும் உடைத்து ஊதி விடலாம் என்பது அவர் எண்ணம்..
அதுமட்டுமல்ல.. ‘இது நம்ம ஆளு’ படம் கால்ஷீட் தொடர்பாக நீண்ட நாட்களாக அவருக்கு தண்ணீர் காட்டி வரும் நயன்தாராவுக்கு தமிழ்சினிமாவில் செக் வைப்பதற்கு தன் கையில் இப்படி ஒரு பதவி இருக்கவேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். சிம்புவின் இந்த எண்ணத்துக்கு சரத்குமாரும் ராதிகாவும் சேர்ந்து செவி சாய்த்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது