‘யு’ சான்றிதழ் பெற்ற ராதா மோகனின் ‘உப்பு கருவாடு’

மொழி, பயணம், அபியும் நானும் என்று குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் வகையில் படம் எடுத்த இயக்குனர் ராதா மோகனின் அடுத்த படம் ‘உப்பு கருவாடு’. இன்று படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘உப்பு கருவாடு’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

கருணாகரன், நந்திதா, எம் எஸ் பாஸ்கர், மயில் சாமி, குமாரவேல், சாம்ஸ், நாராயணன், ரக்க்ஷிதா, சரவணன், ‘டாடி என்னக்கு ஒரு டவுட்டு’ செந்தில் ஆகியோர் நடிக்கும் இப்டத்தில் பிரபல நடன கலைஞர் சதீஷ் முக்கிய வேடத்தை ஏற்றுள்ளார். மதன் கார்க்கியின் பாடல்களுக்கு பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி.

“எல்லா தரப்பினரும் ரசித்து பார்க்கும் வகையில் ‘உப்பு கருவாடு’ படத்தை இயக்கி இருக்கிறேன்..படத்தின் இசை வெளியீட்டு தேதியும், படம் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்” எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன்.