ஸ்ருதிஹாசன் தமிழ்சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 7 வருடங்களில் தமிழில் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.. ஆனால் மூன்று படங்களும் பிளாப் என்று சொல்லும்படி இல்லாவிட்டாலும் ஓஹோவென ஹிட்டாகவும் இல்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
ஸ்ருதி அழகான அதேசமயம் மிகவும் திறமையான நடிகை தான். தெலுங்கில் ஹிட் கொடுத்திருக்கிறார் தான். ஆனால் தமிழ்சினிமாவில் செண்டிமெண்ட், ராசி என ஒன்று இருக்கிறதே.. அதைத்தானே பார்ப்பார்கள்.. திறமையோ அழகோ, அல்லது கமலின் மகள் என்கிற தகுதியெல்லாம் அப்புறம் தானே..
ஆக புலி ஹிட்டாகவேண்டும் என யார் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ, நாளை முதல் காட்சி ரிசல்ட் தெரியும் வரை ஸ்ருதி நகத்தை கடித்துக்கொண்டு டென்சனுடன் இருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.