நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இவ்விழாவில் நடிகர் நாசர் , விஷால் , கார்த்தி , பூச்சி முருகன், பொன்வண்ணன் ,கர்ணாஸ் ,வடிவேலு ,கோவை சரளா ,குட்டி பத்மினி ,ஸ்ரீமன் ,நந்தா ,ரமணா ,விக்ராந்த் , சங்கீதா ,எஸ்.வி.சேகர் , ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் விஷால் பேசியது , என்னை பொறுத்த வரை அனைத்து நடிகர்களும் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வேண்டும் .அனைத்து ஊருக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. நாங்கள் அனைவரும் ஒரு நோக்கத்துக்காக போராடி வருகிறோம். எங்களுடைய நோக்கம் இப்போது கடைக்கோடி கன்னியாக்குமரி வரை போய் சேர்ந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது .அவர்கள் கூறுவதை போல் நாங்கள் யாருக்கும் சரக்கோ கோழி பிரியாணியோ வாங்கி கொடுக்கவில்லை. நாங்கள் சங்கத்துக்காக செலவழிக்கும் பணம் அனைத்தும் எங்கள் சொந்த பணம். எங்கள் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி மிகவும் பொறுப்புள்ளவர். இப்போது கூட இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு நானும் கார்த்தியும் பொறுப்பாக கணக்கு பார்க்க வேண்டும். கார்த்தி தான் எங்கள் சங்கத்தின் கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார். மத்தவற்றை எங்கள் சங்கத்தினர் பார்த்துகொள்வார்கள். வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து வாக்களிக்க விரும்புபவர்கள் நீதிபதியை அணுகி அவர்களிடம் அனுமதி பெற்று நேரில் வந்து வாக்களிக்கலாம் என்றார்.
நாங்கள் தற்போது ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உறுப்பினரை பொறுப்பாளராக அறிவிக்க உள்ளோம். நாங்கள் யாரோ பைனான்சியரிடம் இருந்து பணம் பெற்று சங்க வேலைகளை செய்கிறோம் என்று ராதா ரவி குற்றம் சாட்டியுள்ளார். அது தவறான தகவல். அந்த பைனான்சியரின் முகவரியை அவர்கள் கொடுத்தால் நாங்கள் அவரை சந்திக்க தயாராக உள்ளோம். நான் இதுவரை என்னுடைய படத்தை தயாரிக்க தான் பைனான்சியாரை நாடியுள்ளேன்.இன்று சங்க கூட்டத்தில் ஆயிர கணக்கில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுடைய மிக பெரியது. இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த வரவேற்ப்பை பெற்றது.
எஸ்.பி.ஐ. சினிமாஸ்க்கு நாங்கள் பணத்தை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம். பணத்தை திருப்பி கொடுத்து நாங்கள் உறுதியாக நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டுவிடுவோம்.
நாங்கள் நடிகர் சங்கத்தில் படித்த நடிகர்களை வேலைக்கு அமர்த்த உள்ளோம். நாங்கள் தயாரிக்கும் படத்தை நாங்களே மிக பெரிய அளவில் தயாரிக்கும் முடிவில் உள்ளோம். இதற்கிடையே நடிகர் நாசர் மேடை ஏறி பேசினார் , நடிகர் சரத் குமார் நாங்கள் கமல் ஹாசன் பேச்சை கேட்டு இதை செய்கிறோம் என்று ஒரு தொலைகாட்ச்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார் அந்த அளவிற்கு அறிவில் குறைந்தவர்கள் அல்ல . எங்களுக்கு சுயமாக சிந்திக்க தெரியும்.எனக்கே சந்தேகமாக இருக்கிறது ஏன் அனைத்து நடிகர்களும் எங்கள் எதிர் அணியினரை எதிர்க்கிறார்கள் என்றார்.
பின்னர் பேசிய நடிகர் விஷால் நடிகர் சங்கத்தை , எனக்கு நடிகர் சங்கத்தை கார்ப்ரெட்டாக மாற்ற வேண்டும். இந்த ஜனநாயக நாட்டில் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து எங்களுடன் புகைப்படம் எடுத்துகொள்வது ஆரோக்கியமான விஷயம் என்றார் நடிகர் விஷால்.
Election On 18th October 2015
தலைவர் பதவிக்காக நாசர் அவர்கள்
பொது செயலாளர் பதவிக்காக விஷால் அவர்கள்
பொருளாளர் பதவிக்காக கார்த்தி அவர்கள்
துணை தலைவர் பதவிக்காக பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் அவர்களும் போட்டி இடுகின்றனர்