‘தம்பி அது போன வாரம்’ ; டைவ் அடித்த தாணு..!

“என்னய்யா நடக்குது இங்க’ன்னு ஒரு படத்துல வடிவேலு கேட்பாருல்ல, அதேமாதிரிதான் புதுசா பொறுப்பேத்துக்கிட்ட பாண்டவர் அணியோட முதல் செயற்குழு கூட்டத்துல சில ஆச்சர்யமான நிகழ்வுகள் நடந்திருக்கு.. தேர்தலுக்கு முன்னாடி சரத்குமார் அணிக்கு வாலண்டியரா ஆதரவு தெரிவிச்ச தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணுவும், இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும் விஷால், நாசரை கட்டிப்பிடிச்சு சால்வை எல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணிட்டாங்க.

அதிலும் தாணு வந்து வாழ்த்தியதுதான் ஹைலைட்.. “எதிர்காலத்தில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் விஷால் இணக்கமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது” என தேர்தலுக்கு முன் சொன்ன தாணு, ஆம்பள அஞ்சு கோடி நட்டம், பாயும்புலி பத்துகோடி நட்டம் என ரைமிங் டயலாக் எல்லாம் பேசி விஷாலை கிண்டலடித்த தாணு, “தம்பி.. அது போன வாரம்” என்கிற ரீதியில் திடீரென பல்டி அடுத்ததுதான் செம ட்விஸ்ட்.

அதிலும் “நம்பிக்கை, நாணயம் என்றால் அது நாசர் தான்” என இங்கேயும் சென்டிமென்ட்டாக பேசிய தாணுவுக்கு, இதற்கு முன் தான் ஆதரவு தெரிவித்த சரத்குமார் செல்லாக்காசாக ஆகிவிட்டார் போலத்தான் தெரிகிறது.. எது எப்படியோ, நடிகர்சங்கத்துடன் பிரச்சனை பண்ணாமல் ஒன்றிணைந்து செயல்பட்டால் சரிதான்..