ஒரு படத்துல வடிவேலுவும் லிவிங்ஸ்டனும் ஒரு கல்யாணத்திற்கு போவர்கள்.. அங்கே மணப்பெண் தனக்கு பிடிக்காமல் இந்த கல்யாணம் நடக்கிறது என்றும் தனது காதலர் மண்டபத்துக்குள் தான் இருகிறார் என்றும் சொல்லுவார்.. கடைசியில் பார்த்தால் மணப்பெண் பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் மந்திரம் ஓதும் ஐயர் தான் அந்தப்பெண்ணின் காதலர் என தெரியவரும்.
அந்த மாதிரித்தான் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் இடம்பெற்ற வேதாளம் என்கிற பெயர் அஜித் படத்துக்கு எப்படி டைட்டிலாக போச்சு.. ஒரே கன்ப்யூசன் என மண்டை குழம்பி கிடந்தார்கள் ‘புலி’ குழுவினர்.. படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்த இடத்தில் இருந்து, அஜித் தரப்புக்கு இந்த வேதாளம் விஷயம் லீக்காகி இருக்கலாம் என்கிற கோணத்தில் எல்லாம் ஆராய்ச்சிகள் நடந்தன.
ஆனால் இரண்டு படத்துக்கும் பொதுவான ஆளாக இருந்த, படம் முழுவதும் ட்ராவல் பண்ணின, கதாநாயகியாக நடித்த ஸ்ருதிஹாசன் யாருடைய ஞாபகத்திற்கும் உடனடியாக வராதது ஆச்சர்யம் தான்.. இப்போதுதான் அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அஜித் படத்திற்கு பெயர் வைக்கும் வேலை நடந்தபோது நான்கைந்து தலைப்புகள் பரிசீலனையில் இருந்தனவாம்.. அதில் ஒன்றுதான் வேதாளம்.. இதில் ஸ்ருதியிடமும் ஐடியா கேட்கப்பட, அவர் தான் வேதாளம் பட டைட்டிலை டிக் பண்ணினாராம்..
அதோடு இந்த டைட்டிலை நான் ஏன் செலக்ட் பண்ணினேன்னு பின்னாடி தெரியும் பாருங்க என மர்மமாக வேறு புன்னகைத்தாராம் ஸ்ருதி. அஜித், விஜய் ரசிகர்களில் இரண்டு தரப்புக்கும் இப்போது நடக்கும் குழாயடி சண்டைக்கு காரணம் யார்னு தெரியுதா..? சரி.. தெரிஞ்சு மட்டும் என்ன ஆகப்போகுது..?