எங்கள் தளபதிதான் அடுத்த ரஜினி.. இல்லை, எங்கள் தல தான் அடுத்த ரஜினி என இரண்டு தரப்பு ரசிகர்களும் இன்னும் கோஷம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவ்வளவு ஏன் லிட்டில் சூப்பர்ஸ்டார் என சொல்லிக்கொள்ளும் படமே இல்லாத ‘வாலு’ ரசிகர்களில் சிலர் கூட அப்படித்தான் கூவுகிறார்கள்.. இதில் விஜய் பெயரைக்கூட ரஜினிக்கு இணையாக சொல்வதை பொறுத்துக்கொள்ள முடியும்..
ஆனால் அஜித்தை அடுத்த ரஜினி எந்தவிதத்தில் சொல்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்… திரையுலகில் நடக்கும் நிகழ்வுகள், நல்லது கெட்டதுகள் அனைத்திலும் எந்த வேலை இருந்தாலும் அதை தள்ளிவைத்துவிட்டு தவறாமல் கலந்து கொள்கிறார் ரஜினி. அவர் படங்களில் மட்டுமல்ல, மற்றவர் படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட கலந்துகொள்கிறார்.. அவ்வளவு ஏன்.. நடந்து முடிந்த நடிகர்சங்க தேர்தலில் வாக்களிக்க காலையிலேயே வந்தார். இதில் எந்த லட்சணங்களும் அஜித்திடம் இல்லையே.. அப்புறம் எப்படி அவர் ரஜினியாக முடியும்..?
இன்னொரு நிகழ்வையும் பார்ப்போம்.. தற்போது மலேசியாவில் ரஜினியின் கபாலி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது அல்லவா..? தான் தங்கியிருக்கும் ஒட்டலுக்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் நடுவே இருக்கும் சில கி.மீட்டர் தொலைவை, தேர் கடப்பதை போல ஆயிரமாயிரம் ஜனங்களுக்கு மத்தியில்தான் அதுவும் திறந்தவெளி காரில் கையைத்தபடி தான் கடக்கிறார் ரஜினி.
படப்பிடிப்பு முடிந்து களைப்பாக ஓட்டலுக்கு திரும்புவார் இல்லையா? அங்கு திரண்டு வரும் ரசிகர்களை நோக்கி புன்னகையோடு கைகளை வீசி டாடா காட்டிவிட்டுதான் ஓட்டலுக்குள் போகிறாராம் அது மட்டுமல்ல, அரை மணிக்கொரு முறையோ, ஒரு மணிக்கொரு முறையோ வெளியே வந்து பால்கனி வழியாக கை காட்டிவிட்டும் போகிறாராம்.
இதே மலேசியாவில் பில்லா படப்பிடிப்புக்காக அங்கு வந்து பல நாட்கள் தங்கியிருந்தாராம் அஜித். நாள் முழுக்க காத்திருந்தாலும், யாரை நோக்கியும் கைகாட்ட மாட்டார். கார் கதவை மூடிக் கொண்டார் என்றால் அவர் ஏறும்போதும் இறங்கும்போதும் பார்த்தால் அதிர்ஷ்டம். அது மட்டுமல்ல, ஓட்டலுக்குள் நுழைந்தார் என்றால் மறுநாள் படப்பிடிப்புக்கு கிளம்பும்போதுதான் வெளியே வருவார்.. ரஜினி எங்கே இவர் எங்கே..? சிட்டுக்குருவி ஒருநாளும் பருந்து ஆகமுடியாது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.