‘உன்னைப்போல் ஒருவன்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் கணேஷ் வெங்கட்ராம். இந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ‘அச்சாரம்’ படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். வரும் நவ-22ல் இவருக்கும் நிஷா என்பவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
இதற்கான அச்சாரம் கூட சில மாதங்களுக்கு முன்பே போட்டாச்சு. நல்ல விஷயம்.. நல்லபடியாக கல்யாணம் பண்ணி செட்டிலாகட்டும் என்று பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. ஆனால் நடிகரோ இரண்டு தினங்களுக்கு முன் மணப்பெண்ணுடன் சேர்ந்து போட்டோஷூட் எடுக்கிறேன் என, சினிமா பாணியில் போஸ் கொடுத்து விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.
அத்துடன் போட்டோஷூட் நிகழ்வை ரொமாண்டிக்கான வீடியோவாகவும் எடுத்துள்ளார். சரி, இதை தங்களது பெர்சனல் நினைவாக வைத்துக்கொள்வார் என பார்த்தால் மீடியாக்களுக்கு அனுப்பி கடைபரப்பி விட்டார் கணேஷ்.. திரையுலகை சேர்ந்த ஒரு சிலரோ, இதெல்லாம் தேவையில்லாத பந்தா, எதற்கு திருமணத்தையும் சினிமாவையும் போட்டு குழப்பிக்கொள்கிறார் இந்த மனிதர். என அங்கலாய்க்கின்றனர். வேறென்ன… திருஷ்டி பட்டுடுங்க.. அதனால தான் சொல்றாங்கன்னு நினைக்கிறோம்..