மிகுந்த சிரமப்பட்டுத்தான் நடிகர்சங்க தேர்தலில் வெற்றிபெற்று பதவிகளை பிடித்திருக்கிறது விஷால் அணி.. இப்போது கணக்கு வழக்குகளை ஆராய்ந்து வரும்போதுதான் நிறைய செலவுகளை ரசீது இல்லாமல் கணக்கில் குத்துமதிப்பாக ஏற்றிவைத்து இருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு சங்க ஊழியர்களும் உடந்தை என்பது மறுக்க முடியாத உண்மை.
முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் சொன்னபடி சங்க ஊழியர்கள் கணக்கு வழக்குகளை இஷ்டத்திற்கு எழுதி வைத்திருப்பதை கண்டுபிடித்த விஷால் இந்த ஊழியர்களை வைத்துக்கொண்டு வேலைசெய்தால் நம் தலையிலும் மிளகாய் அரைத்து விடுவார்கள் என்பதால் பழைய ஆட்களை தூக்கியடித்துவிட்டு புதிய நபர்களை பணியில் நியமித்துள்ளதாக சொல்லப்படுகிறது..