அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகள் இல்லை அதனால் அவர் வாய்ப்பு தேடி அலைகிறார் என்று சொன்னால் நம் நாக்கு அழுகிவிடும்.. இஞ்சி இடுப்பழகிக்கு பிறகு ‘தோழா’ படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் ‘பாகுபலி-2, ‘சிங்கம்-3’ என ஏற்கனவே வேலை பார்த்த படங்களின் சீக்குவலில் நடிக்கவும் இருக்கிறார் அனுஷ்கா.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், தமிழில் வந்த உங்களுக்கு மிகவும் பிடித்த படம் என்கிற கேள்விக்கு “மெளன ராகம், புலி. இப்போ பார்க்கணும்னு நினைக்கும் படம் ‘நானும் ரௌடி தான்’, டிரெய்லர் பார்த்தே ரொம்ப பிடிச்சிருந்தது” என கூறியுள்ளார் அனுஷ்கா.
மௌன ராகம் ஒகே.. இதில் ‘புலி’ எப்படி திடீரென உள்ளே வந்தது என விசாரித்தால் அடுத்து விஜய்யின் படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் அதற்கு அச்சாரமாகத்தான் ‘மொக்கை’ புலியை கூட புகழ்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது
நானும் ரௌடி தான் படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த நயன்தாராவுக்கு அந்தப்படத்தில் சிறப்பாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாலும், அவரே விஜய்சேதுபதி அளவுக்கு இறங்கி நடிக்கும்போது நாமும் நடிக்கலாமே என்பதால் தான் அந்தப்படத்தையும் பாராட்டி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேற்கூறிய இரண்டு நடிகர்களின் ஏதாவது ஒரு படத்தில் அனுஷ்கா நடிக்கிறார் என அறிவிப்பு வந்தால் ஆச்சர்யப்பட்டு விடவேண்டாம் என்பதற்காகத்தான் இந்த தகவல்..