ஒருபக்கம் ஊர் முழுவதும் டாஸ்மாக்கிற்கு எதிராக கொடி பிடித்துக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் டாஸ்மாக் இல்லாமல் கதையை யோசிக்க மறுக்கும் நம்ம இயக்குனர் ராஜேஷ், எந்தவகையிலாவது தனது ஆதரவை டாஸ்மாக்கிற்கும் சரக்கு சங்காத்தங்களுக்கும் தெரிவித்துக்கொண்டுதான் வருகிறார்..
முந்தைய படத்திற்கு டைட்டிலை நீளமாக வைத்தாலும் அதை சுருக்கி வாசித்தால் சரக்கின் பெயரான வி.எஸ்.ஓ.பி என்று வரும்வகையில் கவனமாக பார்த்துக்கொண்டார். கூடவே படம் முழுக்க சரக்கும் ஆறாகத்தான் ஓடியது. இப்போது ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கப்போகும் படத்துக்கு பக்தி ரசம் சொட்ட சொட்ட ‘கடவுள் இருக்கான் குமாரு’ என டைட்டில் வைத்துள்ளார்.
மேம்போக்காக பார்த்தால் அப்படித்தான் தெரியும்.. ஆனால் டைட்டிலை ஆங்கிலத்தில் சுருக்கினால் ‘கிக்’ என்கிற பெயர் கிடைக்கும். எப்படியோ தனது கொள்கைக்கு குந்தகம் வராமல் டைட்டில் வைத்து விட்டார். அதேபோல சரக்கையும் எப்படியாவது உள்ளே நுழைத்துவிடுவார் நம்ம ஆளு..