‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் எடுக்க வேண்டும்.. ஆனால் நயன்தாரா மீண்டும் கால்ஷீட் தர தயாராக இல்லை.. இப்படியே வைத்திருந்தாள் பணம் தான் கோடிக்கணக்கில் வீணாகும் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் டி.ராஜேந்தர் இறங்கியுள்ளார். படத்தை காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமாம்.
நயன்தாரா தனது படத்துக்கு ஒத்துழைப்பு தர மறுத்ததால், படத்தின் புரமோஷன், போஸ்டர் மற்றும் பத்திரிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நயன்தாராவை இருட்டடிப்பு செய்து, ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு..
சீப்பை எடுத்து ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்கிற கதை தான் இதுவும்.. ஒரு வேலை இந்தப்படம் தட்டுத்தடுமாறி வெளியானால் அது ஓடப்போவதே நயன்தாராவை வைத்துதான், அவரால் தான் அந்த படம் கரையேறும் என்பதை அறியாத அளவுக்கு பச்சைப்புள்ளையா சிம்பு..? என்னமோ போடா மாதவா..?