கேட்க சகிக்கிறதோ இல்லையோ, இன்றைக்கு பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அனிருத்தை தேடி ஓடுவதும் அவருக்கு கேட்கும் அட்வான்சை கொடுத்து புக் பண்ணுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் ரேஞ்சுக்கு, இல்லையில்லை அதுக்கும் மேல என அவரை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்…
ஆனால் இதைவைத்து பக்காவாக ‘அட்வான்ஸ்’ பிசினஸ் நடத்தி வருகிறாராம் அனிருத்.. தன்னை ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் எல்லாம் தனது அதிரடி பேமன்ட்டை சொல்லி முதலில் பயங்காட்டுவாராம்.. அதற்கும் ஓகே என சொல்பவர்களுக்கு தனது டெர்ம்ஸ் அன்ட் கண்டிசன்ஸ் சொல்வாராம்.
அதற்கும் உடன்படுகிறவர்களிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கிப்போட்டு விட்டு, அதன்பின் வேறு வேலையை பார்க்க போய்விடுவாராம். வேறென்ன அடுத்த படத்திற்கு எங்கிருந்து சுடலாம் என்பதுதான். அட்வான்ஸ் கொடுத்தவர்கள், தம்பி சாங்ஸ் கொஞ்சம் வேணும்ப்பா என்று வந்தால், ஸாரி இப்போ முடியாதுங்க.. வேணும்னா உங்க அட்வான்ஸை வாங்கிக்குங்க என திருப்பிக்கொடுத்து விடுகிறாராம்..
இப்படித்தான் கார்த்தி, சூர்யா படங்களையும் டீலில் விட்டுள்ளாராம். வாங்கின அட்வான்ஸை நாணயமாக திருப்பிக்கொடுத்தாலும், அது தன் வசம் இருக்கும் காலம் வரை தனது தந்தை மூலமாக வெளியே உலாவவிட்டு வட்டியால் லாபம் பார்த்து விடுகிறாராம். காப்பி அடிச்சு மியூசிக் போடுற உனக்கு எதுக்குப்பா இவ்வளவு பில்டப்பு என சில இயக்குனர்கள் திட்டிவிட்டும் போயிருக்கிறார்களாம்.