மலையாள ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ‘மஞ்சு’ என்கிற பெயரில் உருவாகிவருகிறது. இதில் சாய்பல்லவி நடித்த மலர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.. கதாநாயகனாக நாக சைதன்யா நடிக்கிறார். சமீபத்தில் ‘மஞ்சு’ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஸ்ருதிஹாசனின் சில ஸ்டில்கள் எப்படியோ சோஷியல் மீடியா மூலம் லீக்காகின..
இதில் ஸ்ருதியின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் பலர், பிரேமம் படத்தில் தாங்கள் பார்த்த மலர் டீச்சரை ஸ்ருதியிடம் காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதனால் நெட்டில் மீம்ஸ்களாக போட்டு ஸ்ருதிஹாசனை கலாய்த்து வருகின்றனர்..
‘பிரேமம்’ படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் மற்ற இருவரையும் தூக்கி சாப்பிட்டவர் புரபெசராக ‘மலர்’ கேரக்டரில் நடித்திருந்த சாய் பல்லவி தான். அவர் புதுமுகம் என்பதாலேயே அந்த மெச்சூரிட்டியான கேரக்டரை அழகாக ஏற்று வாழ்ந்திருந்தார்..
கேரளாவில் ‘மலர் பேன்ஸ்’ என ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். ஸ்ருதியை பொறுத்தவரை அவர் முன்னணி நடிகையாக இருந்தாலும் ‘மலர்’ கேரக்டரை ஓவர் ஆக்ட் பண்ணி கெடுத்துவிடுவாரே என்கிற பயத்தை ஸ்ருதி உருவாக்கிவிட்டார் என்றே சொல்லப்படுகிறது.