ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள் தான், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கியமானவர் பாலிவுட் நட்சத்திரங்கள் தான். இதற்காக தயார்செய்யப்பட்ட மனுவில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம், வித்யா பாலன், பிபாசா பாசு, சோனாக்சி சின்ஹா, ஷில்பா ஷெட்டி என பலர் கையெழுத்துப் போட்டு உள்ளனர் .
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ் சினிமாவை சுற்றி சுழன்றுவரும் எமி ஜாக்சனும் இதில் கையெழுத்துப் போட்டு உள்ளார்.. இந்தியாக்காரர்களுக்கே இங்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் தெரியவில்லை. இந்த கூத்தில் லண்டன் பெண்ணுக்கு அதைப்பற்றி என்ன தெரியும் என, அவர் புகார் மனுவில் கையெழுத்து போட்டுள்ளது குறித்து இங்கு அவருடன் பழகிய சக நட்சத்திரங்கள் ‘உச்’ கொட்டியுள்ளார்கள். சும்மாவா சொன்னாங்க எதுக்கோ தெரியுமா என்னமோ வாசனைன்னு..