என்றைக்கு ஹன்ஷிகாவை பார்த்து சின்ன குஷ்பு என சொன்னார்களோ அன்றிலிருந்து குஷ்புவுடன் ஒட்டுப்புல் போல ஒட்டிக்கொண்டு குஷ்புவின் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார் ஹன்ஷிகா. சுந்தர்.சியின் ஆஸ்தான நாயகியாக தொடர்ந்து அவரது படங்களில் நடித்தும் வந்தார்.
அந்தவகையில் சுந்தர்.சி இயக்கியுள்ள ‘அரண்மனை-2’ படத்திலும் அவர் ஒரு கதாநாயகியாக நடித்துள்ளார்.. ஆனால் இன்னொரு கதாநாயகியாக த்ரிஷாவும் இருக்கிறாரே.. எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுந்தர்.சி த்ரிஷாவை வைத்து முதன்முதலாக படம் இயக்குவதால் அவருடன் பேசிப்பழகுவதில் அதிக ஈடுபாடு காட்டியிருக்கிறார்.
அதனால் இயல்பாகவே த்ரிஷாவுக்கான காட்சிகள் அதிகமாக இருந்தாலும் கூட தன்னை மட்டம் தட்டுவதற்காகத்தான் த்ரிஷாவுக்கு காட்சிகளை அதிகப்படுத்துகிறார் சுந்தர்.சி என்கிற சந்தேகம் ஹன்ஷிகாவுக்கு எழுந்தது. அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் த்ரிஷாவுடன் உரசல் ஏற்பட்டு பேசாமலேயே இருந்தார்..
இப்போது படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னும் சுந்தர்.சி மீதான கோபம் தணியாததால், தனக்கு வரவேண்டிய 5௦ லட்ச ரூபாய் சம்பள பாக்கியை கேட்டு அவரை நச்சரித்து வருகிறாராம் ஹன்ஷிகா. நாம் பார்த்து வளர்த்துவிட்ட இந்தப்பொண்ணுக்கு என்ன ஆச்சு என திகைப்பில் இருக்கிறார்களாம் சுந்தர்.சியும் குஷ்புவும்..