சமீபகாலமாக சரிவை சந்தித்து வருகிறார் மிர்ச்சி சிவா.. அவரது படங்கள் வரிசையாக அடிவாங்குவதால், விட்ட மார்க்கெட்டை பிடிக்கும் விதமாக மீண்டும் ‘தமிழ்படம்’ பாணியில் ஒரு படத்தில் கலாய்ப்பு நாயகனாக நடித்து வருகிறாராம்.. படத்தின் பெயர் ‘அட்ரா மச்சான் விசிலு’ என வைக்கப்பட்டுள்ளதாம்.
ஆனால் நாம் சொல்லபோகும் விஷயம் சிவாவை பற்றியது அல்ல. இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் பவர்ஸ்டாரை பற்றியது.. நாம் கேள்விப்பட்ட வரையில் விஷயம் உண்மைதானென்று தெரிகிறது.. என்ன ஆச்சு பவர்ஸ்டாருக்கு என மூளையை போட்டு குழப்பும் முன் என்ன நிகழ்ந்தது என்பதை முதலில் பார்த்து விடுவோம்..
தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர்களை எல்லாம் கலாய்த்து ஒரு படம் வெளியானது போல இந்தப்படத்தில் தமிழில் உள்ள முன்னணி ஹீரோக்களை கலாய்த்து காட்சிகளை எடுத்து வருகிறார்களாம். அந்தவகையில் இந்தப்படத்தில் ‘முரட்டுக்காளை’ ரஜினி கெட்டப்பில் நடித்து வருகிறாராம் பவர்ஸ்டார் சீனிவாசன்.
இதில் அவர் காளையை அடக்கும் காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம். அந்த காளைக்கு கபாலி என்று பெயர் வைத்துள்ளார்களாம். காளையை அசால்ட்டாக அடக்கும் பவர்ஸ்டார் இறுதியாக அதன் கொம்பையே பிடுங்கி எடுத்து விடுவதாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார்களாம்.
படம் வெளியானபின் இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் ரசித்து சிரித்தாலும், ரஜினி தரப்பில் இருந்து இதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை.. இன்னும் மற்ற முன்னணி நடிகர்களுக்கும் இதேபோல கலாய்ப்பு காட்சிகள் இருக்கின்றனவாம்.. ஏற்கனவே பவர்ஸ்டார் மேடைகளில் தேவையிலாமல் பேசுகிறார் என அவருக்கு கண்டனம் தெரிவித்து வாய்ப்பூட்டு போட்டிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.
இப்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் தயாரித்து வருகின்ற, அதுவும் ரஜினி நடிக்கிற படத்தின் டைட்டிலை ஒரு காளைக்கு வைத்து கிண்டல் பண்ணுவதால், இருக்கும் சிக்கலை பவர்ஸ்டார் பெரிதாக்கி கொள்வாரோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்தப்படம் வெளியாக இருக்கிறதாம்.