‘புலி’ படத்தில் இருந்து அஜித் தனது வேதாளம் படத்திற்கு டைட்டிலை உருவியதாக விஜய் ரசிகர்கள் கூப்பாடு போட்டதும், விஜய் தான் நடித்துவரும் படத்திற்கு ‘தெறி’ என பெயர் வைத்து பதிலுக்கு பதில் தங்களது தல டயலாக்கில் இருந்து உருவிவிட்டார் என அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது என பெருமூச்சு விட்டார்கள்..
ஆனால் இல்லை இன்னும் அது தொடர்கதைதான் என்று சொல்கிற மாதிரி அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் க்ளைமாக்ஸ் படமாக்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்சாலை லொக்கேஷனில் தான் ‘தெறி’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பத்து நாட்கள் எடுக்க அட்லீயும், விஜய்யும் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இந்த விபரம் தெரிந்த அஜித் ரசிகர்கள் லொக்கேசனையுமா காப்பி அடிப்பீங்க என தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.