சோஷியல் மீடியாவில் ‘பீப்’ இளைஞர்கள் ; பதிலடி கொடுத்த பூஜா-பார்வதி..!


சோஷியல் மீடியாக்களிலும் சில பீப்’ பசங்கள் உலாவரத்தான் செய்கிறார்கள்.. சினிமா நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களுடன் நேரடியாக உரையாட சோஷியல் மீடியாவை பயன்படுத்தி சகஜ பாணியில் வலம் வர முயற்சித்தாலும் இதுபோன்ற சில ‘பீப்’ நபர்கள், ‘பீப்’ வார்த்தைகளை வீசி அவர்களை காயப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இப்படித்தான் நான் கடவுள் நடிகை பூஜாவை பற்றி அவரது பேஸ்புக் பக்கத்தில் மோசமான ‘பீப்’ வார்த்தைகளால் ஒருவன் கமெண்ட் பண்ணியிருந்தான்.

உடனே பூஜா, “என்னை ஆபாசமாக வர்ணித்த உன்னை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். நாட்டில் நிறைய கற்பழிப்பு குற்றங்கள் நடக்கிறது. நீயும் அப்படி ஒரு குற்றவாளி ஆகிவிடக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். உன் கெட்ட செயல்களை நிறுத்திக் கொள்ள நீ நல்லவனாக மாற நிறைய அவகாசம் இருக்கிறது. நீயும் ஒரு பெண்ணிடமிருந்து தான் வந்திருக்கிறாய். உன் தாயும், சகோதரியும் பெண்தான் என்பதை மறந்து விடாதே. உனக்கு பெண் குழந்தை பிறந்தால் பெண்களை சுற்றும் ஓநாய்களிடமிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டிய கடமையில் நீ இருப்பாய். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நல்லவனாக நடந்து கொள்” என ஒரு காட்டியிருந்தார்.

இதேபோல சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடிகை ‘மரியான்’ பார்வதி ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதற்கு ஆல்பிரெட் என்கிற 16 வயது இளைஞன் ஒருவன் அருவெறுக்கத்தக்க வார்த்தையை கமெண்ட்டாக பதிவிட்டிருந்தான். உடனே பதிலுக்கு ஆவேசம் காட்டவில்லை பார்வதி.. பதிலாக, “அவனை விட அவன் பிறந்த குடும்பத்தை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த சிறுவன் இப்போதிருந்தாவது நல்ல பழக்கங்களை கற்கவில்லை என்றால் காலமும் இந்த சமூகமும் அவனுக்கு நல்ல பாடத்தை கற்றுத்தரும். ஆனால் நிச்சயம் அது அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்காது” என அந்த ‘பீப்’ பையன் திருந்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக பதில் அளித்துள்ளார்