கேரளாவில் பீப் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் அடிமாடுகளை பற்றி கவலைப்பட யாருமில்லை.. ஆனால் பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு ஆதரவாக சில தடிமாடுகள் கிளம்பி சலம்பல் பண்ணி வருகின்றனர்… சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்கள் என்கிற சிலர் சிம்புவுக்கு ஆதரவாக தீக்குளிப்பதாக ஒரு லிட்டர் கேனில் பெட்ரோல் வைத்துக்கொண்டு படம் காட்டினார்கள்…
இப்போதோ நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பத்து, இருபது பேர் ஒன்றுகூடி சிம்புவை கைது செய்யக்கூடாது என போராட்டம் பண்ண முயற்சிக்க, போலீஸார் அவர்களை மிரட்டி விரட்டினார்கள். சரி, யார் இந்த கூட்டம், சிம்புவுக்காகவெல்லாம் தீக்குளிக்க ஆட்கள் இருகிறார்களா என விசாரித்தால் இதன் பின்னணியில் அவரது தந்தை தான் இருக்கிறாராம்..
தனது மகனுக்கு ஆதரவாக டெய்லி பேட்டா அடிப்படையில் பத்து இருபது லட்சிய இளைஞர்களை வரவழைத்து குவார்ட்டர், கட்டிங் மற்றும் சிக்கன், மட்டன் மற்றும் இந்த பிரச்சனைக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத இன்னொரு பீப் அதாங்க மாட்டுக்கறி உட்பட நேரத்துக்கு வகைவகையாய் வாங்கி கொடுத்து .பேட்டாவும் கொடுத்து சிம்புவுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு வளையம் அமைத்திருக்கிறாராம் அவரது தந்தையார் என்று இந்தி பிரச்சார சபா ஏரியாவில் உள்ள சிலர் நமுட்டு சிரிப்புடன் பேசிக்கொள்கிறார்கள்..