தனுஷை சங்கடத்தில் சிக்கவைத்த தங்கமகன் தோல்வி..!


தனது படங்கள் தொடர்ந்து வியாபார ரீதியாக வெற்றி பெற்று வருவதால் ‘தங்கமகன்’ படத்தின் பிசினஸ் வேல்யூவை அதிகரித்திருந்தார் தனுஷ்.. குறிப்பாக கோபுரம் பிலிம்ஸ் அன்புவை வைத்து படத்தை தயாரித்தார்.. அன்பு இந்தப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை, ஸ்ரீகிரீன் நிறுவனத்துக்கு நல்ல விலைக்கு கைமாற்றி விட்டார்.

ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியதால் வசூலிலும் சுணங்கியது.. இதனால் ஸ்ரீகிரீன் நிறுவனத்துக்கு சில பல கோடிகள் நட்டம் ஆனது… தனுஷ் படத்தை நம்பி வாங்கி இப்படி ஆனதால் புலம்பிய ஸ்ரீகிரீன் நிறுவனத்ததை, வர்களது தயாரிப்பில் தான் ஒரு படம் பண்ணித்தருவதாக சொல்லி சமாதானப்படுத்தியுள்ளாராம் தனுஷ்.