சரத்குமாருக்கு கெடு வைத்த நடிகர் சங்கம்…!


புதிய அணி நடிகர்சங்க பொறுப்பேற்றதும் முந்தைய கணக்கு வழக்குகளை ஒப்படைப்பேன் என்று சொன்ன நடிகர்சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், சொன்னபடி தராமல் இழுத்தடித்தார்.. பின் நெருக்கடி அதிகமாகும் என தெரிந்ததால் ஒரு வருட கணக்கை மட்டும் ஒப்படைத்துவிட்டு கணக்கை ஒப்படைத்து விட்டதாக அறிவித்தார்..

ஆனால் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும்போது, அதில் உள்ள நடிகர்சங்க கணக்கு, நடிகர்சங்க அறக்கட்டளை கணக்கு என தனித்தனியாக விபரம் எதுவும் கொடுக்கப்படவில்லை.. அதேசமயம் இந்த ஒரு வருடத்திற்கு முந்தைய கணக்குகள் எல்லாம் இனி சரத்குமார் எப்போது தருவார் என தெரியாததால், சட்டப்படி சரத்குமாரின் மீது நடவடிக்கை எடுக்க தீவிரமாக செயலில் உள்ளது நடிகர் சங்கம்..