என்ன இது தனுஷ் திடீரென இவ்வளவு நல்ல பிள்ளையாக மாறிவிட்டார் என்கிற ஆச்சர்யத்தைவிட சந்தேகமும் குழப்பமும் தான் ஏற்படுகிறது… ‘மாரி’ என்கிற படத்தில் தனுஷின் கேரக்டரும் கதையும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அதை வெற்றிப்படமாக அறிவித்ததுடன் அதற்கு இரண்டாம் பாகமும் எடுக்கப்போவதாக பிலிம் காட்டினார்கள்..
தொடர்ந்து ‘தங்கமகன்’ படத்தில் முந்தைய படத்திற்கு நேர்மாறாக ‘அம்மா பிள்ளை’யாக நடித்து ‘தங்க மகன்’ என சொல்லவைக்க முயற்சித்தார்.. இவர் ஏன் இந்த ரூட்டை பிடித்தார் என யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, இப்போது அம்மா கணக்கு’ என மீண்டும் அம்மா சென்டிமென்ட்டை கையில் எடுத்திருக்கிறார் தனுஷ்.. அம்மா சென்டிமென்ட் மட்டுமே தனக்கு கைகொடுக்கும் என கணக்கு போடுகிறார் போலும்..
அதிலும் படத்தை இயக்குபவர் ஒரு பெண் இயக்குனர்.. பெண் என்பதால் இளக்காரமாக சொல்லவில்லை.. பெண் இயக்குனர்களுக்கும் நம் தமிழ்சினிமாவுக்கும் குறிப்பாக தனுஷுக்கும் கூட ஆகாதே.. அதுதான் கூட்டிக்கழிச்சு பார்த்தால் இந்த ‘அம்மா கணக்கு’ ஒர்க் அவுட் ஆகுமா என்பது பிப்டி பிப்டி சான்ஸ் தான்