‘ஆரோகணம்’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன், அதை ஒருசிலர் ஆஹா, ஓஹோவென பாராட்டவே அடுத்து ‘நெருங்கிவா முத்தமிடாதே’ என்கிற படத்தை எடுத்தார்.. ஆனால் படம் பிளாப் ஆனது.. இருந்தாலும் இரண்டு படங்களை இயக்கிய ஆசையில் மூன்றவதாக தற்போது ‘அம்மணி’ என்கிற படத்தை எடுத்து வைத்துள்ளார்.
ஆனால் படம் இன்னும் பிசினஸ் ஆகாமல் இருக்கிறது. படத்தை பார்த்த ஒருசில விநியோகஸ்தர்கள் இது தேறாது என உதட்டை பிதுக்கிவிட்டு செல்கிறார்களாம். இன்னும் சிலரோ, இதை வெளியிட்டு நட்டமடைவதை விட வெளியிடாமல் இருந்தால் அந்த காசாவது மிஞ்சும்.. பெயரையும் கெடுத்துக்கொள்ளாமல் தப்பிக்கலாம் என தயாரிப்பாளர்களிடம் கூறி செல்கிறார்களாம்.
‘அம்மணி’க்கு வேண்டிய சேனல் கூட, படத்தை ரிலீஸ் பண்ணிட்டு வாங்க, அப்புறம் ரைட்ஸ் பத்தி பிசினஸ் பேசலாம் என கதவை சாத்திவிட்டதாம். என்ன செய்வது என புரியாமல் நொந்துபோய் கிடக்கிறாராம் அம்மணி..