தெலுங்குல சுட்டதை தெலுங்குலேயே பிசினஸ் பண்ணும் வேதாளம் அன் கோ..!


சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடியதாக சொல்லப்பட்ட ‘வேதாளம்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாகவும் அதில் ஹீரோவாக பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகவும் நம்ம ஊர் எஸ்.ஜே.சூர்யா அதை இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் இப்போதுதான் ‘வேதாளம்’ உருவான விஷயம் ஒன்று முருங்கை மரம் ஏறியுள்ளது.. அதாவது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான ஊசரவல்லி’ படத்தின் கதையைத்தான் பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்து ‘வேதாளம்’ ஆக மாற்றியிருந்தாராம் இயக்குனர் சிவா.

இப்போது அது கூட தெரியாமல் அந்தப்படத்தையே மீண்டும் தெலுங்கிற்கு கொண்டு போகிறார்களாம். அதை நினைத்தால் தான் சிரிப்பாக வருகிறது என்கிறார்கள் தெலுங்குப்படங்களை ஒன்றுவிடாமல் பார்க்கும் உதவி இயக்குனர்கள்.