பொதுமேடைகளில் ராதாரவி பேசும்போது லோஞ்சம் வெளிப்படையாகவே பேசுவது வழக்கம், சிலரை அவனே, இவனே என்று அழைத்தாலும் கூட அது ஒருவகையான அன்பின் வெளிப்பாடு தான். நடிகர் சங்க தேர்தலுக்குப்பின் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து தற்போது படங்களில் நடிப்பதில் மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார் ராதாரவி.. கடந்த வாரம் வெளியான ‘அரண்மனை’ மற்றும் ‘இறுதிச்சுற்று’ ஆகிய இரண்டு படங்களிலும் ராதாரவி நடித்திருந்தது ஆச்சர்யம்..
அதேபோல சித்தார்த்தின் ‘ஜில் ஜங் ஜக்’ படத்திலும் ராதாரவி நடித்துள்ளார். இந்தப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளநிலையில் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.. ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த நடிகர்களிலேயே சீனியர் ராதாரவி தான்.. இந்த சந்திப்பு வந்திருந்த ராதாரவியை மேடைக்கு அழைத்த சித்தார்த் ‘வாருங்கள் எங்கள் யூத் ஐகான்’ என வர்ணித்தார்..
மேடையேறி சித்தார் உட்பட அனைவரையும் பாராட்டி பேசினார் ராதாரவி. குறிப்பாக சித்தார்த், மழைவேள்ளத்தின்போது செய்த உதவிகளை மிகவும் பாராட்டினார். தன்னை படப்பிடிப்பில் எப்படி எல்லாம் ஏமாற்றி தாஜா பணி வேலை வாங்கினார் என்பதை எல்லாம் குறிப்பிட்ட ராதாரவி, கடைசியாக என்னை வயதானவன் என குறிப்பிடும் விதமாக ‘யூத்’ என திரும்ப திரும்ப அழைத்து கேவலப்படுத்தி விட்டாரே” என்றார் கலட்டாவாக்.. இது வழக்கம் போல சீரியஸ் அல்ல.. சும்மா உல்லுலாயி தான்..