தலைமறைவாக இருந்த பூனைக்குட்டி வெளியே வந்தது..!


பீப் சாங் சர்ச்சைக்கு பின், இத்தனை நாள் தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு தனது பிறந்தநாளான இன்று தனது வீட்டில் குடும்பத்துடனும் சில ரசிகர்களுடனும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.. இந்த நிகழ்வில் சிம்புவின் தந்தை டி.ஆரும், தம்பி குறளரசனும் பேசினார்களே தவிர சிம்பு வாய் திறந்ததாக தகவல் எதுவும் இல்லை.

இத்தனைக்கும் இன்று அதிகாலை.. இல்லையில்லை நள்ளிரவு 12 மணிக்கு மேல் தன்னைக்கான தனது வீட்டு வாசலுக்கு வந்திருந்த ரசிகர்களை (!) பார்த்து கையசைத்து அவர்களையும் அழைத்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அதன்பின் வழக்கம்போல தனது இயல்பு… ஸாரி தலைமறைவு வாழ்க்கைக்கு போய்விட்டார் என்றே சொல்லப்படுகிறது.