எல்லோருக்கும் பெயரும் புகழும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை.. சினிமாவென்றால் கேட்கவே வேண்டாம்.. அப்படி கிடைத்த நல்ல பெயரை தக்கவைக்க முடியாமல் விடலைப்பருவத்திலேயே வெம்பி வீணாய் போனவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.. நாரோடு சேர்ந்து பூவும் நாராகி போனது மாதிரி, பீப் பாடல் சர்ச்சையால் தனது பேரை நன்றாகவே கெடுத்துக்கொண்டார் அனிருத்..
இத்தனைக்கும் அந்தப்பாடலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என அவரும் சொல்லிவிட்டார்.. பாட்டு எழுதி பாடிய மன்மதனும் சொல்லிவிட்டார். இருந்தாலும் சரிந்த பெயரை தூக்கி நிறுத்துவது அவ்வளவு சாதாரணமான வேலையா என்ன..? அதனால் பெண்களை பற்றி மிகவும் உயர்வாக சித்தரித்து இந்த காதலர் தினத்தன்று ‘அவளுக்கென’ என்கிற ஒரு ஆல்பத்தை வெளியிட இருக்கிறாராம் அனிருத். அல்பமான வேலையை மூடி மறைக்க ஆல்பம் வெளியிடும் டெக்னிக் அவருக்கு கைகொடுக்கிறதா என பார்க்கலாம்.