சிவகார்த்திகேயன் ரொம்பவே பக்குவநிலைக்கு வந்துவிட்டதாகத்தான் தெரிகிறது.. அதனால் தான் சமீபத்தில் பெருமை பெரிசா அல்லது தன்மானம் பெரிசா என்கிற நிலை வந்தபோது தன்மானத்திற்காக மிகப்பெரிய வாய்ப்பையும் ஒதுக்கி தள்ளிவிட்டாராம்.
அப்படியென்ன நடந்ததாம்..? விக்னேஷ் சிவன் அடுத்து தான் இயக்க இருக்கும் படத்திற்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக நடிக்க அழைத்தாராம்.. கதாநாயகி வேறு யார்..? இயக்குனரின் மனம் கவர்ந்த நயன்தாரா தான்.. ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனர்.. ஒவ்வொரு ஹீரோவும் ஜோடிபோட துடிக்கும் ஹீரோயின்.. இருந்தும் இந்த வாய்ப்பை வேண்டாம் என உதறிவிட்டாராம் சிவகார்த்திகேயன்..
அதற்கு காரணமும் நயன்தாரா தானாம். ஆம்.. மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தபோது அவர் வளரும் நடிகர் என்பதால் ஹன்ஷிகவைத்தவிர முன்னணி நடிகைகள் பலரும் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார்களாம்.. அதில் நயன்தாராவும் அடக்கம்.. அப்போதே மனதளவில் காயம்பட்ட சிவகார்த்திகேயன், தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நயன்தாராவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறாராம்.