‘அம்மணி’யை கண்டுகொள்ளாமல் கைவிரித்த ஓரெழுத்து சேனல்..!


இயக்குனராக வேண்டும் என வெறியோடு வருபவனுக்கும், வாய்ப்பு கிடைத்ததால் சம்பந்தமே இல்லாமல் இயக்குனரானவர்களுக்கும் நிரிறைய வேறுபாடு உண்டு.. இதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இரண்டாவது ரகம்.. டிவி நிகழ்ச்சி மூலமாக அவருக்கு கிடைத்த புகழை வைத்து இரண்டு படங்களை இயக்கி ரிலீசும் செய்துவிட்டார்.. ஆனால் அந்த படங்கள் ஓடவில்லை என்பது வேறு விஷயம்..

அப்படியானால் தொடர்ந்து படம் எப்படி கிடைத்து என்றால் எல்லாம் அவர் அவர் நிகழ்ச்சி நடத்திய ‘ஜி’ தமிழ் சேனல் தந்த பின்புலம் தான். படம் ஓடுதோ ஓடவிலையோ, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தை ஓரளவு நல்ல விலைகொடுத்து வாங்கிக்கொண்டதால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்தது.

இந்தநிலையில் தான் மூன்றாவது படமாக ‘அம்மணி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி.. ஆனால் படத்தை பார்த்தவர்கள் இது தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணும் அளவுக்கு தேறாது.. விருது விழாக்களுக்கு வேண்டுமானால் அனுப்பி வையுங்கள் என கூறிவிட்டார்களாம்.

வழக்கமாக அவரது படத்தை வாங்கும் சேனலும் உதட்டை பிதுக்கிவிட்டதாம். ஆக படம் வெளியாவது சிரமம் தான் என சொல்லப்படுகிறதாம். இனி இந்த ‘அம்மணி’க்கு படம் கிடைப்பதும் சந்தேகம் தான் என்றும் சொல்லப்படுகிறதாம்.