“ஒரு மணி நேரத்தை வீணாக்கிவிட்டேன்” ; மகளிர் தின நிகழ்ச்சியில் விஷால் கொடுத்த அதிர்ச்சி..!


மகளிர் தினத்தன்று ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் நடைபெற்ற ‘தன்னம்பிக்கை பெண்கள் இன்று நாளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் விஷால். விஷால் இப்படிக்கூட பேசுவாரா என அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், மாணவிகள், திருநங்கைகள் மற்றும் விழாக்குழுவினர் என அனைவருமே ஒரு சில நொடிகள் அதிர்ந்துதான் போனார்கள்..

“வாழ்க்கையில் எனது ஒரு மணி நேரத்தை இன்று இங்கே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து, வீணடித்துவிட்டேன். நீங்கள் பேசிய விஷயங்களை பார்க்கும்போது இதெல்லாமே ஏதோ கட்டாயத்தின் பேரில் படித்து முடித்து இப்படி செய்வேன், இப்படியெல்லாம் சாதிப்பேன் என்று சொல்வதெல்லாம் என்னால் நம்ப முடியாது, நான் இங்கே இதை சொல்லணும்னு முடிவு பண்ணித்தான் இவ்ளோ நேரம் இங்கே இருந்தேன், சொல்லிட்டேன். அவ்ளோதான். நான் என் கண்ணால பார்த்தது, உங்களால் சத்தியமா சாதிக்கமுடியாது.”.. இதுதான் எடுத்தவுடன் விஷால் பேசியது.

இப்படி பேசினால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது.. ஆனால்,. ஒரு சில நொடிகள் மெளனத்திற்குப் பிறகு “இந்த விஷால் இல்லை, எந்த கொம்பன் சொன்னாலும் நம்பாதீங்க.. எப்பவுமே உங்களுடைய தன்னம்பிக்கையை தளரவிடாதீங்க. அதுக்காகத்தான் இப்படி சொன்னேன்” என ட்விஸ்ட் வைத்து வந்திருந்தவர்களை ரிலாக்ஸ் பண்ணினார் விஷால். நல்லா பண்ணினீங்கய்யா ட்விஸ்ட்டு..!