விஜயை காலி பண்ணனும்!.. ஜி.வி. பிரகாஷின் அதிரடி திட்டம் அம்பலம்!..

‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ என்று இரண்டே இரண்டு வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்திருக்கும் ஜி.வி பிரகாஷ் எவ்வளவு சீக்கிரம் முன்னணி ஹீரோ ஆக முடியுமோ? அவ்வளவு சீக்கிரத்தில் ஆகி விட வேண்டுமென்று ஆசைப்படுகிறாராம்.

அப்படி ஆசைப்படுவதில் தப்பில்லை, அதற்காக விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் புகழை டம்மி செய்து தன் பெயர் புகழ்பெற வேண்டும் என்று நினைப்பது தான் விஜய் ரசிகர்களிடம் ஜி.வி பிரகாஷை கொஞ்சம் ‘கவனிங்க’ விஜய் ஃபேன்ஸ் என்று சொல்ல வைத்திருக்கிறது.

அதற்காக வருகிற மார்ச் 20-ம் தேதி ‘தெறி’ படத்தின் ஆடியோ ரிலீஸ் அன்று ட்விட்டரில் ‘தெறி’ படத்தின் டைட்டிலோடு தன்னுடைய பெயர் தான் ட்ரெண்ட்டிங்கில் வர வேண்டும் என்று வேலை செய்து வருகிறாராம் ஜி.வி.

‘தெறி’ என்றாலே விஜய் பெயர் தான் ட்ரெண்ட்டிங்கில் வரும் என்பது அவரின் முந்தைய படமான ‘புலி’ வரை உதாரணம் இருக்கிறது. அந்த வேலையை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் செய்து விடுவார்கள்.

ஆனால் ‘தெறி’ படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்பதால் ‘தெறி’ இசையைப் பொருத்தவரை தன்னுடைய பெயர் தான் ட்ரெண்ட்டிங்கில் வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறாராம்.

அதற்காக தனது பெயரில் #gv50 #gvprakash #DubTheriStep என சில # ஹேஷ்டேக்குகளை தயார் செய்து தனக்குத் தெரிந்த Twitter, Facebook நபர்களிடம் சொல்லி தெறி ஆடியோ ரிலீஸ் நடைபெறும் நாள், முந்தைய தினம், அடுத்த நாள் என மூன்று நாட்களில் இந்த ஹேஷ்டேக்குகளில் எக்கச்சக்கமான ட்விட்டுக்களை போட்டு ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறாராம்.

“மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய் வெளக்கெண்ணெய் விஜய் எக்கேடு கேட்டா எனக்கென்ன!” என வெறி கொண்ட விஜய் ரசிகர்கள் ஜி.வியின் இந்த சதியை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்களா என்ன?