நாளைய கேள்விக்கு இப்போதே தயாரா(க்)கும் நயன்தாரா..!


தமிழிலும், மலையாளத்திலும் நயன்தாரா நடித்துவரும் படங்களையும் அதில் அவரது கேரக்டர்களையும் கவனித்து வருபவர்களுக்கு இவர் ஏன் இப்போதே தொடர்ந்து அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்கிற கேள்வி நிச்சயம் எழும். அதேசமயம் இன்னொரு பக்கம் ஜீவா, ஜெயம் ரவி என இளம் கதாநாயகர்களுடனும் நடிக்கிறார் தான். மறுப்பதற்கில்லை.. அதிக சம்பளம் தருகிறார்கள்.. அதனால் அம்மாவாக நடிக்கிறார் என ஒரேயடியாக சொல்லிவிடமுடியாது. இதற்கு பின்னியில் ஒரு வலுவான காரணம் இருக்கிறதாம்.

அதாவது முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் கிட்டத்தட்ட ரிட்டையர்டு நிலைக்கு வந்ததும், தான் ஏற்கனவே ஜோடியாக நடித்த ஹீரோக்களின் படங்களிலேயே அவர்களுக்கு ஜோடியாக ஆனால் பிளாஸ்பேக்கிலோ அல்லது இரட்டை வேடத்தில் நடிக்கும் நாயகனின் இன்னொரு கேரக்டருக்கு ஜோடியாகவோ கட்டாயம் அம்மா வேடத்தில் நடித்து தான் தீரவேண்டிய சூழல் இன்னும் இருக்கிறது. இல்லை வேறு ஒரு இரண்டாம் நிலை ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தான் கிடைக்கலாம்.. சிம்ரன், மீனா, ரோஜா என நாம் பார்க்காததா..?

தனக்கும் அந்த ரிட்டயர்டு சூழல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் தன்னை ஒரு தைரியசாலி நடிகையாக, எந்த கேரக்டரிலும் துணிந்து நடிக்கும் நடிக்கும் நடிகையாக ஒரு இமேஜை வடிவமைத்துக்கொண்டு விட்டார் நயன்தாரா. அதேசமயம் இளம் ஹீரோக்களோடும் ஜோடியாக நடித்துவருவதால் தனக்கு மற்ற நடிகையர்களைப்போல வழக்கமான ரிட்டையர்டு டைம் என்பது இல்லை என சொல்லாமல் சொல்கிறார் நயன்தாரா.