நட்சத்திர கிரிக்கெட்டுக்காக தங்களது ஜோடிகளை வளைத்த ஹீரோக்கள்..!


நடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்காக எட்டு அணிகளை பிரித்திருக்கிறார்கள்.. சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என எட்டு பேர் டீம் கேப்டன்கள்.. இதில் நடிகர்கள் பாதி, நடிகைகள் பாதி என சம அளவில் வீரர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

அந்த அணிகளுக்கான பட்டியலை பார்த்தபோதுதான், அட என்று சொல்லும்படியான ஒரு விஷயத்தை கவனிக்க முடிந்தது.. கார்த்தி அணியில் தமன்னா, விஷால் அணியில் வரலட்சுமி, சிவகார்த்திகேயன் அணியில் கீர்த்தி சுரேஷ், விஜய்சேதுபதி அணியில் காயத்ரி, ரம்யா நம்பீசன் என இந்த நால்வர் அணியிலும் அவர்களது ஆஸ்தான ஹீரோயின்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்..

ஆனால் காதல் இளவரசன் ஆர்யாவின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் எல்லாம் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா என பெரிய ரேஞ்ச் நடிகைகள் என்பதால் அவர்கள் யாரும் இந்த கிரிக்கெட்டில் கலந்துகொள்ளவில்லை.. அதனால் ஆர்யாவுக்கு பிந்துமாதவி, நந்திதா, பூனம் கவுர், சுஜா வாருணி என சின்ன நடிகைகளையே ஒதுக்கிவிட்டனர். பாவம்யா ஆர்யா.