எஸ்.. சினிமாவை ஆழமாக கவனித்து வரும் ரசிகர்களுக்கு இந்த விஷயம் ஏற்கனவே கொஞ்சம் பிடிபட்டிருக்கும்.. அப்படி அந்த சாராம்சத்தை கவனிக்காதவர்கள் கூட இப்போது நாம் சொல்வதை கேட்டால் அட, ஆமாம்ல.. இதுல இப்படி ஒண்ணு இருக்கா என மூக்கில் விரல் வைப்பார்கள்..
நம் தமிழ் சினிமாவில் இன்று கோலோச்சும் ஹீரோக்களை ஒரு காலத்தில் வளர்த்துவிட்ட சில சீனியர் இயக்குனர்கள் அவர்கள் மீதான தங்களது கோபத்தை மறைமுகமாக காட்டி வருகிறார்கள்.. ரஜினி, கமலை வைத்து அடிக்கடி படம் இயக்கிய கே.எஸ்.ரவிகுமாரை ‘லின்காவின் தொல்விக்குப்பிறகு யாரும் சீந்தவில்லை..
பார்த்தார் மனிதர்.. கன்னடத்தில் சுதீப்பை வைத்து படம் இயக்க போய்விட்டார்.. அஞ்சானுக்கு பிறகு லிங்குசாமிக்கு கைகொடுக்க எந்த ஹீரோவும் வரவில்லை.. விஷால் மட்டும் போனால் போகிறதென்று உதவிக்கரம் நீட்ட, அதை தட்டிவிட்ட லிங்குசாமி, தெலுங்கிற்கு போய் அல்லு அர்ஜுன் என்கிற புளியங்கொம்பை பிடித்துவிட்டார்.
ஏ.ஆர்.முருகதாஸும் தன் பங்கிற்கு அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இத்தனைக்கும் அங்குள்ள நடிகர்கள் எல்லாம் இவர்களை சிவப்பு கம்பள வரவேற்புடன்தான், தங்களது படங்களை இயக்க அழைத்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.